ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு
November 24, 2022
0
மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் இன்று காலை ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு வந்தார். அங்கு போலீசாரின் உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து போலீசாரின் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்வையிட்டார். வானங்களின் தற்போதைய நிலை, அவற்றின் பாராமரிப்பு முறை குறித்து கேட்டறிந்தார். போலீசாரின் வஜ்ரா வாகனங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆயுதப்படை போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்து அவர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பணியிடம் ஆறுதல் குறித்தும் அதிகாரிகளுடன் பேசினார். பின்னர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைச் தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஐ.ஜி. சுதாகர் வந்தார். அங்கு ரோந்து பணிக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள 6 வாகனங்களை பார்வையிட்டார். பின்னர் எஸ். பி. அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபட்டார். இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், டிஎஸ்பி சேகர் உட்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags