அரசுமருத்துவ மனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு….
November 23, 2022
0
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குவாலிட்டி பிராபர்ட்டி மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின்ஙசார்பில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூன்று ஷிப்டுகளில் 132 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தூய்மை பணிக்கு 315 ரூபாயும் காவல் பணிக்கு 285 ரூபாயும் நாள் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது.
இதனை உயர்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஊதிய உயர்வு தொடர்பாக ஈரோடு தொழிலாளர் நலதுறை அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்து.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்த்தால் தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் மருத்துவமனையில் பணிகள் பாதிகப்பட்டுள்ளது.
மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.
Tags