தமிழகத்தில் காலிபணியிடங்கள் நிரப்புவதில் இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல் நிழல் படியமால் ஒருதிட்டமும் நடக்காது... கண்ணகி பிறந்த மண்ணில் அன்றாடம் பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது...
November 28, 2022
0
தமிழகத்தில் காலிபணியிடங்கள் நிரப்புவதில் இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல் நிழல் படியமால் ஒருதிட்டமும் நடக்காது...
கண்ணகி பிறந்த மண்ணில் அன்றாடம் பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது...
ஆண்டுக்கு ஒருஇலட்சம் கோடி கடன் வாங்கி நடத்துவதா திராவிட மாடல் அரசா என காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவிமணியன் கோபிசெட்டிபாளையத்தில் பேட்டி...
கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் காமராஜர் மக்கள் கட்சியின் மேற்கு மண்டல ஐம்பெரும் விழா நடைபெற்றது
இந் நிகழ்ச்சியில் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவிமணியன் கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே சிறப்புரை நிகழ்தினார்
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவிக்கையில்
தமிழகத்தில் காலிபணியிடங்கள் நிரப்பவது உள்ளிட்ட அனைத்திலும் இரண்டு திராவிட கட்சிகள் இருக்கும் வரை ஊழல் நிழல் படியமால் ஒரு திட்டமும் நடக்காது நிர்வாகத்தின் எந்த திசையில் திரும்பினாலும் ஊழல் ஊழலாகதான் இருக்கும்
அதிமுக ஆட்சியில் எடப்பாடி மீது கலெக்சன், கரப்சன், கமிசன் என திமுக எதிர்கட்சி தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கூறியதைபோலவே இன்று திமுக அரசு ஸ்டாலின் மீது எடப்பாடி கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஊழல் குறித்து நிரூபிக்க தாயாரா என முதல்வர் எடப்பாடிக்கு சவால் விடுவாரா என கேள்வி எழுப்பினார்
சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் எப்படி சாகும் வரை மறையாதோ அதுபோல் திராவிட கட்சிகள் ஆட்சி நடத்தும்போது ஊழல் நிறைந்த ஆட்சியாகதான் இருக்கும் என்றார்
இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைகழங்களில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு இதுவரை 55ஆண்டுகளில் திராவிட கட்சிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டது
திராவிட மாடல் அரசாகவும் இந்திய மாடல் அரசாகவும் தமிழ் தேசிய மாடல் அரசாகவும் நடந்துங்கள் ஆனால் தமிழகத்தில் திராவிட மாடல் அரசு மதுக்கடைகளை தானே நம்பியுள்ளது உண்மையாக அனைவருக்கும் நல்லாட்சி நடக்கிறது என்றால் மதுவிலக்கு அமுல்படுத்துங்கள்
மதுக்கடை போதையால் தமிழகத்தில் அன்றாடம் பாலியல் குற்ற சம்பவங்கள் நடக்கிறது கண்ணகி பிறந்த மண்ணில் அன்றாடம் பாலியல் குற்ற சம்பவங்களால் படுகொலைகள் அரங்கேறுகிறது
ஒருபுறம் பாலியல் கொலைகள் மறுபுறம் அரசியல் கொலைகள் மேலும் தனியாக வீட்டில் உள்ளவர்களை படுகொலை செய்யப்படுகின்றனர் சட்டம் ஒழுங்கு எங்கே உள்ளது என்றைக்கு மதுகடைகள் மூடப்படுகிறதோ அன்றுதான் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்
திராவிட மாடல் ஆட்சியில் 20 - 21 நிதி ஆண்டில் ஒரே ஆண்டில் 90 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது ஆண்டுக்கு ஒருஇலட்சம் கோடி கடன் வாங்கி நடத்துவதா திராவிட மாடல் அரசு
மதுக்கடை விற்பனையில் 39ஆயிரம் கோடிக்கு மது விற்பதுபோல் பாதிக்கு பாதி கள்ளசந்தைகளில் மது விற்கப்படுகிறது இதனால் அரசுக்கு மிகப்பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன அனைவருக்கும் நல்லாட்சி வேண்டும் எனில் இரண்டு திராவிட கட்சிகளையும் மக்கள் தூக்கி எறிந்தால் மட்டுமே முடியும் அதற்கு காமராஜ் மக்கள் கட்சி அதற்கான பணியை முன்னெடிக்கும் என காமராஜ் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவிமணியன் தெரிவித்தார்
Tags