Type Here to Get Search Results !

வழிகாட்டும் சேவை மையம் ஐயப்ப பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையதுறை ஏற்பாடு

வழிகாட்டும் சேவை மையம் ஐயப்ப பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையதுறை ஏற்பாடு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டுள்ளது.இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.மேலும் 24 மணி நேரமும் செயல்படும் ஐயப்பன் மையத்தில் அய்யப்ப பக்தர்களுக்கு தேவையான அவசர உதவி தொலைபேசி எண்கள், முதலுதவி மையங்கள் மற்றும் வரைபடம் போன்ற தகவல்களை துண்டு பிரசுரங்களாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் சபரிமலை செல்வதற்கு பல்வேறு வழிகள் இருந்தாலும் கம்பம் மெட்டு,போடி மெட்டு மலைபாதையில்தான் பெரும்பாலான பக்தர்கள் பயணிப்பது குறிப்பிட தக்கது தமிழக கேரள எல்லையான தேனி மாவட்டம் வீரபாண்டியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.