இஸ்லாமிய ஆண்கள் மட்டுமே பங்கேற்று இஸ்திமா என்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது ...
November 25, 2022
0
ஈரோட்டில் உலக நன்மைக்காக வேண்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள் மட்டுமே பங்கேற்று இஸ்திமா என்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது ...
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருந்தேவன் பாளையத்தில் உள்ள அல் - அமீன் இன்ஜினியரிங் கல்லூரியின் மைதானத்தில் இஸ்லாமிய ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஈரோடு மாவட்ட இஸ்திமா என்னும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் தலைசிறந்த இஸ்லாமிய உலமாக்கள் பங்கேற்று ( அல்லாஹ் ) இறைவனைப் பற்றியும், இறைத்தூதர் நபிகள் நாயகம் வாழ்வியல் குறித்தும், நபி தோழர்களின் வரலாறுகள் குறித்தும் விளக்கமாக இஸ்லாமியர்களின் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது, மேலும் நபிகள் நாயகம் வாழ்வியலைப் போலவே ஒவ்வொரு இஸ்லாமியர் வாழ்விலும் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து உலக நன்மைக்காக வேண்டியும், பெருந்தொற்று நோய்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நெசவுத்தொழில் சிறப்படைய வேண்டியும் சிறப்புத் தொழுகை, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது, நிகழ்வில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்,
இந்நிகழ்ச்சிக்காக, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன் உத்தரவிற்கிணங்க, மொடக்குறிச்சி காவல் ஆய்வா ஆய்வாளர் தீபா தலைமையிலானா 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags