பெருந்துறை சிப்காட், கழிவுநீரைநீர்நிலைகளில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
November 28, 2022
0
பெருந்துறை சிப்காட், கழிவுநீரைநீர்நிலைகளில் வெளியேற்றும் தொழிற்சாலைகள்
மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் அருகில் தொழிற்சாலை கழிவுகளால் பாதிப்புக்குள்ளான செங்குளம் பகுதியில் உள்ள குளத்தினை அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
சு.முத்துசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
பெருந்துறை சிப்காட் பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகள் முறையாக செயல்பட
வேண்டும். தொழிற்சாலைகள் முறையாக செயல்படாமல் கழிவுநீரை வெளியேற்றுவதால்
மக்கள் பயன்படுத்தும் நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் செங்குளம் பகுதி மக்கள் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் செங்குளம் பகுதியில் உள்ள குளம்
பாதிப்படைந்துள்ளது. இப்பகுதி மக்கள் பெருமளவில் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள்.
இந்த கழிவுநீர் பிரச்சினையால் விவசாயம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து
தொழிற்சாலைகள் இது போன்ற கழிவுநீர் வெளியேற்றி வருவதால் விவசாயம் முழுவதுமாக
பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே அரசு அலுவலர்கள் தொழிற்சாலை நிறுவன
மேலாளர்களிடம் பேசி இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்கள்.
மேலும், முறையாக செயல்படாமல் கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றும் தொழிற்சாலைகள்
மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், செங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது விளைநிலங்களில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் கழிவுநீர் கலப்பால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை கணக்கெடுக்கப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உதயகுமார், சென்னிமலை ஒன்றியத் தலைவர்
காயத்ரி இளங்கோ உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
Tags