Type Here to Get Search Results !

தமிழகத்திலேயே முதன்முறையாக பழங்குடியினர் அருங்காட்சியகம் ,சூழல் கலாச்சார கிராமத்தை நேரில்வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பார்வையிட்டார்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் உட்கோட்டம், பவானிசாகர் வனச்சரகத்தில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாச்சார கிராமத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுனண்ணி, மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள்இயக்குநர்(சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்)இராமசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் பழங்குடியினர் மக்களுக்காக தமிழகத்திலேயே முதன்முறையாக இந்த பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாச்சார கிராமமானது மொத்தமுள்ள 20 ஏக்கரில் 9 ஏக்கர் பரப்பில் 1.06.2018 சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் இப்பணி தொடங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினர் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையினை அறிந்து கொள்ளும் வகையில் இருளர், படுகர், தோடர், பனியர், காட்டுநாயக்கர், கோட்டா, குரும்பர் 7 வகையான பழங்குடியினரின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் வனவிலங்கு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.4.இலட்சம் வழங்கி வந்ததை உயர்த்தி, தற்போது ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் வன விலங்குகளால் விளைபயிர்கள் சேதமடைந்தால் ஏக்கருக்கு ரூ.25,000-ம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் வாழ்ந்த வீடு, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை சிலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாச்சார கிராமத்தில் நடைபாதை மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு கோரியுள்ளதை தொடர்ந்து விரைவில் வரும் நிதியாண்டில் நிதியினை பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் சூழல் சுலாச்சார கிராமத்தில் மலைவாழ் பழங்குடியினர் விளைபொருட்கள் விற்பனை அங்காடியையும், சிற்றுண்டிகூடம், அரங்கம், நீர்வீழ்ச்சி உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். தொடர்ந்து சத்தியமங்கலம் வளக்கோட்டம், அணில் நத்தம் கிராமத்தை சேர்ந்த 10 நபர்களுக்கு சுயதொழில் தொடங்க கிராம வனக்குழு மூலம் தலா ரூ. 10,000 வீதம் ரூ.1,00,000 மதிப்பிலான சுழற்சி நிதி கடனுதவிகளை வழங்கினார். ஆசனூர் வனகோட்டத்திற்கு சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் 2 வாகனங்கள் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கினார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மக்களிடம் பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்), கிருபாசங்கர் , துணை இயக்குநர் (ஆசனூர்) வனக்கோட்டம்) தேவேந்திரகுமார் மீனா இவப,வன் சரசு அலுவலர் (பவானிசாகர்) சிவக்குமார், சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.