ஈரோடு மாவட்டத்தில் ‘விவசாயிகளுக்கு ஜம்பதாயிரம் விவசாய மின் இணைப்பு வழங்கும்;” திட்டத்தின் கீழ் கட்டணமில்லா மின் இணைப்பு வழங்கி வாழ்வில் ஒளியேற்றி வருகிறார்
November 29, 2022
0
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இத்திட்டத்தில் பயனடைந்த ஈரோடு மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சர் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
------------
தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில்
எரிசக்தித்துறையின் 2021-22 ஆம் ஆண்டு மானியக்கோரிக்கையில் மாநிலத்தின் விவசாய உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டிலேலே முதன் முறையாக இது வரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு அன்றுதொடங்கிவைத்தார். இத்திட்டம் ரூ.3025/- கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக எரிசக்தித்துறையின் 2022-23 ஆம் ஆண்டு மானியக்கோரிக்கையில் தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடனும் நடப்பு நிதியாண்டில் 50,000 எண்ணிக்கையில் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்
சார்பில் நடைபெற்ற விழாவில், விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.
அரசின் விவசாய மின் இணைப்பு திட்டத்தினை பொறுத்தவரை சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய 2 மின்பகிர்மான வட்டங்கள் உள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த ஈரோடு மின் பகிர்மான வட்டம் நகரியம், தெற்கு, பெருந்துறை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண்,கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒரு இலட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டத்தில் 1187 எண்ணிக்கையிலும்;, கோபிசெட்டிபாளையம் மின்பகிர்மான வட்டத்தில் 2105 எண்ணிக்கையிலும் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜம்பதாயிரம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டத்தில் 1143 எண்ணிக்கையும், கோபிசெட்டிபாளையம் மின்பகிர்மான வட்டத்தில் 1711 எண்ணிக்கையும் விவசாய மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது.
_____________
ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டம், சலங்கபாளையம் பகுதியைச் சேர்ந்த
.பத்மாவதி, க/பெ. திரு.கா.பாலசுப்பிரமணி,
த/பெ.காமாட்சிசுந்தரம் என்பவர் தெரிவித்ததாவது,
2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. எனக்கு இரண்டு மகன்;கள் உள்ளனர். பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர். எனது நிலம் வானம் பார்த்த பூமியாக உள்ளது. தற்பொழுது நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளேன். நான் ஆழ்துளை கிணற்றுக்கு விவசாய மின் இணைப்பு கோரி 2012ஆம் ஆண்டு முன் வைப்புத்தொகையாக ரூ.500/- செலுத்தி விண்ணப்பித்திருந்தேன். தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்றவுடன், ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியதோடு தற்போது கூடுதலாக ஜம்பதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் இத்திட்டம் அறிவித்த, 15 நாட்களுக்குள், எனக்கு 10.0 HP அளவில் மின் இணைப்பு கட்டணமில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் எனக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. நான் எனது விவசாய நிலத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட உள்ளேன். இதன் மூலமாக எனது வருவாயினை பெருக்கிக் கொள்ள முடியும்.
மேலும் முதலமைச்சர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இத்தகைய திட்டத்தினை அறிவித்து கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திருக்கரங்களால் உத்தரவு ஆணையினை பெற்றுக்கொண்டேன். இத்தகைய சீரிய திட்டத்தினை அறிவித்து, எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியினை ஏற்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்த…
Tags