பொது சிவில் சட்டம் இந்திய மக்கள் அனைவரையும் பாதிக்கும் எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் அ.ச. உமர் பாரூக் பேட்டி
November 28, 2022
0
பாரதிய ஜனதா கட்சி பொது சிவில் சட்டம் கொண்டு வருவதாக கூறுவது இந்திய மக்கள் அனைவரையும் பாதிக்கும் என்று எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் அச. உமர் பாரூக் கூறினார் கட்சியின் தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடந்தது பின்னர் அவர் செய்தியாளர்களிடம்கூறியது ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு போல பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் இந்துக்கள் உட்பட அனைத்து இந்திய மக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவே மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அதை எதிர்ப்போம் பாபர் மசூதி இடிப்பு என்பது மன்னிக்க முடியாதது இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது எனவே எங்களுடைய இடம் எங்களுக்கு கிடைக்கும் வரை போரட்டம் தொடரும் எங்களுக்கு மாற்றிடம்வழங்கியதை நாங்கள் ஏற்கவில்லை இஸ்லாமியர்களுக்கு மூணு புள்ளி அஞ்சு சதம் இட ஒதுக்கீடு உள்ளது மக்கள் தொகைக்கு ஏற்ப அதை ஏழு சதமாக உயர்த்த மாநில அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அந்தந்த சமுதாய மக்களுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பதை ஏற்க முடியாது ரூபாய் 8 லட்சம் வருமான வரம்பு உள்ளவர்களை எப்படி ஏழை என்று கூற முடியும் மேலும் இது சமூக நீதிக்கு எதிரானது பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கட்டை நாங்கள் ஏற்கவில்லை முத்தலாக் தடைச் சட்டத்தையும் எதிர்க்கிறோம் நான்கைந்து இஸ்லாமிய பெண்களைத் தவிர மற்றவர்கள் அதை ஆதரிக்கவில்லை கோவை குண்டு வெடிப்பு என்பது ஒரு நாடகம் தான் இந்துத்துவ அமைப்புகள் ஒரு பதட்டத்தை ஏற்படுத்த முயல்கின்றன தமிழக போலீஸ் மிக சிறந்த முறையில் அதை அணுகியது ஆனால் நிர்பந்தம் காரணமாக தேசிய புலனாய்வு அமைப்பிடம் அவ்வழக்கைஒப்படைத்தது திமுக அரசு. தமிழக போலீசார் திறமையானவர்கள் அவர்களே வழக்கை நடத்தி இருக்கலாம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அரசால் தடை செய்யப்பட்டுள்ளது அதை அவர்கள் சட்டரீதியாக அணுகுவார்கள் அவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை அவர்கள் எங்களுக்கு தோழமை அமைப்புதான் ஈரோடு பிரப்சாலைக்கு மீனாட்சிசுந்தரம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதற்கு பக்கத்தில் மேட்டூர் சாலை உள்ளது அதற்கு மீனாட்சி சுந்தரம் சாலை என்றும் ஏற்கனவே உள்ள பிரப்சாலைக்கு மீண்டும் அவர் பெயரை சூட்ட வேண்டும் ஏனென்றால் கிறிஸ்துவ பாதிரியார் பிரப்ரோட்டின் ஈரோடுகல்வி தந்தை ஆவார் 90-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை அவர் உருவாக்கியவர் அதேபோன்று மீனாட்சி சுந்தரமும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ஈரோடு ரயில்வே நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயரிட வேண்டும் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட எஸ்டிபி ஐ தலைவர் லுக்மான் தலைமை வகித்தார்.
எஸ்.டி.பி.ஐ மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அ.ச.உமர் ஃபாரூக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா, மாவட்ட துணைத்தலைவர் ஆட்டோ அப்துல் ரகுமான், மாவட்ட பொருளாளர் பர்ஹான் அகமது, மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஜமால்தீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனாப் ஜம்பை.ரபீக், ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Tags