ஈரோடு செய்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிய அமைச்சர் சு.முத்துசாமி… செய்தியாளர்கள் அமைச்சருக்கு நன்றி…
November 26, 2022
0
ஈரோடு செய்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிய அமைச்சர் சு.முத்துசாமி… செய்தியாளர்கள் அமைச்சருக்கு நன்றி….
.ஈரோட்டில் செய்தியாளர் அறை திறப்பு..
அமைச்சர் சு.முத்துசாமிக்கு பாராட்டு..
ஈரோடு நகரின் மையப்பகுதியில் உள்ள கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் புதியதாக செய்தியாளர்களுக்கு அறை அமைத்து கொடுத்த அமைச்சர் சு.முத்துசாமி, அதனை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அறை ஒதுக்கி தரப்பட்டது. செய்திகளுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் செய்தியாளர்கள் இங்கு அமர்ந்து செய்திகளை் தொகுத்து அலுவலகங்களுக்கு அனுப்பும் பணியிலும், ஓய்வெடுக்கவும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் புதியதாக வந்த காவல் கண்காணிப்பாளர், செய்தியாளர்களை அந்த அறையில் இருந்து வெளியேற்றினார். அந்த அறை நீண்ட காலம் காலியாகவே கிடந்தது. தற்போது சமீபத்தில் அதில் மதுவிலக்கு காவல் அலுவலகம் கொண்டு வரப்பட்டது. ஒதுங்க இடமின்றி தவித்த செய்தியாளர்கள் அங்கிருந்த ஆலமரத்தடி பிள்ளையார் கோவிலில் அமர்ந்தபடி பணியை தொடர்ந்தனர். வெயில், மழை காலங்களில் கடுமையாக இன்னல்களை செய்தியாளர்கள் எதிர்கொண்டனர். பாம்பு, தேள் உள்ளிட்ட விச ஜந்துகளிடமும் நல்வாய்ப்பாக பல முறை உயிர் தப்பினர். மேலும், சாராய விற்பனையில் கைதாகி ஜாமீனில் கையெழுத்திட காவல் நிலையம் வரும் நபர்களுடனும் அமர வேண்டிய சூழல் செய்தியாளர்களுக்கு உருவானது.
இந்நிலையில், செய்தியாளர்களின் அவல நிலை குறித்து அமைச்சர் சு.முத்துசாமியின் கவனத்திற்கு செய்தியாளர்கள் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து நடவடிக்கையில் இறங்கிய அமைச்சர், கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அறை முழுவதும் புணரமைக்கப்பட்டு கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் அமைச்சர் சு.முத்துசாமி ரிப்பன் வெட்டி செய்தியாளர்களுக்கான அறையை திறந்து வைத்தார். பின்னர் அறைக்கான சாவியை செய்தியாளர்களிடம் வழங்கினார். இதன் மூலம், ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாக ஒதுங்க இடம் இன்றி தவித்த செய்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக அமைச்சருக்கு செய்தியாளர்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாச்சியர் சதீஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் செந்தில் குமார், உதவி அலுவலர் கலைமாமணி, வட்டாச்சியர் பாலசுப்பிரமணியம், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம், திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார்,
மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, துணை செயலாளர் சின்னையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருவாசகம், முன்னாள் மேயர் குமார் முருகேஷ், நிர்வாகிகள் திண்டல் குமாரசாமி, எலக்ட்ரீசியன் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags