கோவில் பிரச்சினையில் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் ஈரோடுமாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஆட்டோ டிரைவர் புகார் மனு
November 22, 2022
0
சிவகிரி அருகே கருக்கம்பாளையம் பொரசமேட்டுப்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ டிரைவரான இவர் ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-
எங்களது ஊரில் ராஜகணபதி, பாலசுப்பிரமணியர் ஆகிய சாமிகளுடன் கூடிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த 20-ந் தேதி சங்காபிஷேகம் நடந்து முடிந்த பிறகு இரவு 8 மணிஅளவில் வரவு, செலவு கணக்குகளை ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பார்த்து கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த சிலர் ‘தங்களை கேட்காமல் வரவு செலவு கணக்குகளை எவ்வாறு பார்க்கலாம்’ என்று கூறிவிட்டு எங்களை தாக்கினார்கள். இதில் எனது இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், பிரச்சினையை தடுக்க வந்த 7 பேரும் காயம் அடைந்தார்கள்.
இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
Tags