பாஜக கவுன்சிலர் கணவரைதாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
November 25, 2022
0
மொடக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர் சத்யா தேவியின் கணவர் சிவசங்கரை நேற்று தாக்கிய திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர் சி சரஸ்வதி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வேதானந்தம் மற்றும் சத்யா தேவி ஈரோடு மாவட்ட எஸ்பியிடம் இன்று மனு அளித்தனர் அவர்கள் கூறியதாவது மொடக்குறிச்சி பேரூராட்சியில் பல்வேறு ஊழல்கள் நடக்கின்றன இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் பேரூராட்சி இயக்குனர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பே புகார் அளிக்கப்பட்டது சில அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி விட்டு சென்றனர் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்தவர் இருக்கிறார் ஒரே ஒரு நிறுவனத்தின் மூலமாக மட்டுமே கட்டுமான பணிகள் பேரூராட்சியில் நடக்கின்றன இதுபோன்ற முறைகேடுகளை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல பாஜக மொடக்குறிச்சியில் சுவரொட்டிகளை வெளியிட்டது சிவசங்கர் பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார் அந்த நகரில் நேற்று ஒட்டப்பட்ட போஸ்டரை உள்ளாட்சி ஊழியர் கிழித்த போது அவர் கேள்வி எழுப்புகிறார் அப்போது திமுகவைச் சேர்ந்த எட்டு பேர் அவரை பலமாக தாக்கினர் அவர் ஈரோடு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இது சம்பந்தமாக மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது ஆனால் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை ஆனால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முயற்சி நடக்கிறது இதை எஸ்பி இடம் கூறினோம் முறைப்படி விசாரணை நடத்தி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற்றது முதல் திமுகவினர் இதுபோன்ற அராஜகத்தில்ஈடுபடுகின்றனர் பாஜகவின் வளர்ச்சியை இதன் மூலம் தடுக்க நினைக்கின்றனர் மொடக்குறிச்சி பேரூராட்சியில் இரண்டு பாஜக உறுப்பினர்களும் ஒரு அதிமுக உறுப்பினரும் உள்ளனர் ஊழல்களை பாஜக வெளிப்படுத்துவது திமுகவினருக்கு பிடிக்கவில்லை இப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அனைத்து
கட்சிக ளை திரட்டி தொடர் போராட்டத்தை நடத்துவோம் இவ்வாறு அவர்கள் கூறினர்
Tags