கோபிசெட்டிபாளையம் நடைபெற்ற குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்றனர்.
November 25, 2022
0
கோபிசெட்டிபாளையம் நடைபெற்ற குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்றனர்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் கூட்டமைப்பின் சார்பில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் தொடுதல், தடவுதல் போன்ற பாலியல் துன்புறுதல்களை தடுப்பது குறித்து பெற்றோர்களிடைய குழந்தைகள் தெரிவிக்க வேண்டுமெனவும், வளரிளம் பெண்கள் தேர்வில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவத்தை தவிர்க வேண்டுமென்றும், பெண் குழந்தைகள் தைரியமாக செயல்பட வேண்டுமெனவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
பதாகைகளை ஏந்தியபடி
50க்கும் மேற்பட்ட பெண்கள் தலைகவசத்துடன் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர்
முன்னதாக இப்பேரணியில் கோபி உதவி காவல் ஆய்வாளர் மீனாட்சி மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷகிலாபானு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர் .
கோபி அருகே உள்ள கல்லூரிபிரிவில் தொடங்கிய இப்பேரணியில் 50 ககும் மேற்பட்ட பெண்கள் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து கரட்டடிபாளையம், ல.கள்ளிப்பட்டி, கச்சேரிமேடு மற்றும் தினசரி மார்கெட், பேருந்துநிலையம், கரட்டூர் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
Tags