Type Here to Get Search Results !

ஈரோட்டில் இரவில் பரபரப்பு சம்பவம் ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது தந்தை -மகன் உயிர் தப்பினர்

ஈரோடு சங்கு நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு . இவர் தனது மகன் பாட்ஷா. பாபு தனது மகனுடன் இணைந்து காரில் பினாயில் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு பாபுவும், பாஷாவும் தங்களது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பழையபாளையம் அருகே வரும் போது காரில் எரிபொருள் கியாஸ் தீர்ந்துவிட்டது. இதை எடுத்து பாட்ஷா அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து காரில் பெட்ரோல் அடிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. வீடு அருகே இருந்ததால் பாபுவும், பாட்ஷாவும் காரை தள்ளி கொண்டு சென்று கொண்டிருந்தனர். சங்கு நகர் பிரிவு அருகே சென்ற போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் கார் குப்பு குப்புவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சடைந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அனைத்தனர். எனினும் காரில் இருந்த இருக்கைகள் எரிந்து செய்தமடைந்தன. அதைப்போல் காருக்குள் இருந்த 500 லிட்டர் பினாயில் பாட்டில் எரிந்து சேதமடைந்தன. நல்ல வேளையாக தந்தையும், மகனும் வெளியே நின்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இரவில் கார் தீ பிடித்து இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.