கொசு வலையை போர்த்திக் கொண்டு தூய்மை பணியாளர்கள் மனுக்கொடுத்தனார்
November 21, 2022
0
ககொசு வலையை போர்த்திக் கொண்டு தூய்மை பணியாளர்கள் மனுக்கொடுத்தனார் டெங்கு மஸ்தூர் பணியாளர்களாக ஈடுபட்டு வரும் எங்களுக்கு வருடம் இரண்டு உடை வழங்க வேண்டும்.ஈரோடு மாவட்ட தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கொசு வலையை போர்த்திக் கொண்டு மாவட்ட கலெக்டரிடம் சம்பளம் சரி வர வழங்குவதில்லை என்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது… ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பல வருடங்களாக டெங்கு மஸ்தூர் பணியாளர்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறோம். பத்து ஊராட்சிகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு மற்ற ஒன்றியங்களில் வழங்குவது போல் சம்பளம் வழங்க வேண்டும். அரசு ஒதுக்கிய மக்கள் தொகை எண்ணிக்கை ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும். மிகவும் சொற்ப கூலிக்கு பணி செய்யும் எங்களுக்கு மிகவும் தாமதமாக நாலு மாதங்கள் கழித்து சம்பளம் கிடைக்கிறது மாத மாதம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதியி டெங்கு மஸ்தூர் பணியாளர்களை நியமிக்க உத்தரவிட்டும் இன்று வரை ஆட்களை நியமிக்க வில்லை. உடனே ஆட்களை நீ என்ன செய்ய வேண்டும் மேற்கண்ட கோரிக்கைகளைக் நிறைவேற்றிட கொசு வலையை போர்த்திக் கொண்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்
Tags