ஈரோடு கருங்தேவன் பாளையம் பகுதியில் உள்ள அல்-அமீன் என்ஜினீயரிங் கல்லூரியில் 9-வது பட்டமளிப்பு விழா
November 26, 2022
0
ஈரோடு கருங்தேவன் பாளையம் பகுதியில் உள்ள அல்-அமீன் என்ஜினீயரிங் கல்லூரியில் 9-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி தலைவர் கே.ஏ.எஸ். அமானுல்லா தலைமை தாங்கினார். செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே.ஜபருல்லா முன்னிலை வகித்தார். முதல்வர் முகமது ஜுபைர் ரஹ்மான் வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமத் அபூபக்கர் மற்றும் சையது முனவர் அலி சிஹாப் தங்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்கள்.
சிவில், மெக்கானிக்கல், இ.இ.இ., இ.சி.இ., கம்ப்யூட்டர் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த 300-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் துணைத்தலைவர்கள் முகமது ஹசன் அலி, இஸ்கந்தர், முகமது ஹாரிஸ், சேக் மீரான், இணைச்செயலாளர்கள் முகமது அலி, அத்தீப், பொருளாளர் சாதிக் அலி, இணை பொருளாளர் முகமது வாசிம், உறுப்பினர்கள் முகமது தாஜ்முகைதீன், ஹமீது, அப்துல் வாஹித், முகமதுஹபீழ், அப்துல் நாசிர், அஹமது காலித், நிர்வாக அதிகாரி முகமது சபியுல்லா மற்றும் பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Tags