ஈரோட்டில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சுதா மருத்துவமனை கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுமி உள்பட 6 பேர் மாயமாகி மீட்பு
November 28, 2022
0
ஈரோட்டில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சுதா மருத்துவமனை கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுமி உள்பட 6 பேர் மாயமாகி மீட்பு
சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமி உட்பட 6 சிறுமிகள் காப்பகத்தில் இருந்து தப்பி ஓட்டம்.
காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு தப்பி ஓடிய 6 சிறுமிகளையும் மீட்ட நிலையில் தப்பி ஓடியதற்கான காரணம் குறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் சிறுமிகளிடம் தீவிர விசாரணை.
*********
ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூரில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
இந்த காப்பகத்தில் பாலியல் வழக்குகளில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சிருமிகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இங்கு சமீபத்தில் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுதா மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளால் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமியும் பராமரிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய 16 வயது சிறுமி உட்பட 6 சிறுமிகள் காப்பகத்தில் இருந்து தப்பி சென்றதாக காப்பகத்தின் நிர்வாகிகள் காவல் துறையில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு காப்பகத்தின் அருகில் உள்ள பெருமாள் மலையில் 3 சிறுமிகளையும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 3 சிறுமிகளையும் என தப்பிச்சென்ற 6 சிறுமிகளையும் கண்டுபிடித்து ஈரோடு கொள்ளுகாட்டு மேட்டில் உள்ள அரசின் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
காப்பகத்தில் சிறுமிகள் தங்குவதற்கு முறையான வசதிகள் இல்லாததால் 6 சிறுமிகளும் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில், தப்பி சென்றதற்கான காரணம் குறித்தும், இச்சம்பவத்திற்கும் சுதா மருத்துவமனைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?, காப்பகத்தில் சிறுமிகள் துன்புறுத்தப்பட்டார்களா? என 6 சிறுமிகளிடமும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags