பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றம்
November 28, 2022
0
பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றம்
ஈரோடு, நவ.28 -
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103. 71 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு நேற்று 4800 கன அடி வந்த நிலையில் இன்று
1 ஆயிரத்து 117 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 600 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 2, 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags