ஈரோட்டில் 2 இடங்களில் ரூ. 2 கோடி 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
November 28, 2022
0
ஈரோட்டில் 2 இடங்களில் ரூ. 2 கோடி 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
சு.முத்துசாமி ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 3 வார்டு எனர் 31 லட்சுமி நகர் மற்றும் வார்டு எண் 33 சக்தி நகர் ஆகிய பகுதிகளில் எஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4550.00 ச.மீ பரப்பளவில் ரூ.240 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிகளில் ஈரோடு மாநகராட்சி மரியாதைக்குரிய துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) மாதேஸ்வரன், ஈரோடு மாநகராட்சி மண்டலம் 3 தலைவர் சசிகுமார், உதவி ஆணையர்கள் விஜயகுமார், விஜயா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் திரு.பாலசுப்பிரமணியம், ஊடகத்துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்
Tags