மல்லிகை பூ ஒரு கிலோ 1575 பனிபொழிவால் வரத்து குறைந்தது சத்தி மலர் சந்தையில்
November 23, 2022
0
மல்லிகை பூ ஒரு கிலோ 1575 பனிபொழிவால் வரத்து குறைந்தது சத்தி மலர் சந்தையில்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை, முல்லை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
சக்தியில் இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை படுகிறது.
ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மற்றும் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதனால் மல்லிகை பூ விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் . பூக்களின் இன்றைய விலை நிலவரம் மல்லிகை பூ கி. 1050 _ 1575 ரூபாய்க்கும்,
முல்லை கி. 580 முதல் 660 ரூபாய்க்கும், காக்கடா கி. 500 முதல் 600
ரூபாய்க்கும், செண்டுமல்லி கி. 21 ரூபாய் முதல் 61 ரூபாய்க்கும், கோழி கொண்டை பூ கி.10 ரூபாய் முதல் 59ரூபாய்க்கும், ஜாதி முல்லை கி.500 – 650 ரூபாய்க்கும், கனகாம்பரம் கி. 1050 ரூபாய்க்கும், சம்பங்கி கி.60 ரூபாய்க்கும், அரளி கி. 260 ரூபாய்க்கும், துளசி கி. 40 ரூபாய்க்கும், செவ்வந்தி கி. 100-140 ரூபாய்க்கும் ரூபாய்க்கும், துளசி கி 40 ரூபாய்க்கும், விற்பனையானது.
இந்நிலையில் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
Tags