14 கோடி சொத்தை அபகரித்ததாக தம்பதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு. மேட்டுநாசுவன்பாளையம் ADMK பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரன் உட்பட ஆறு பேர் மீது புகார்.
November 28, 2022
0
14 கோடி சொத்தை அபகரித்ததாக தம்பதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு.
மேட்டுநாசுவன்பாளையம் ADMK பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரன் உட்பட ஆறு பேர் மீது புகார்.
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் இவர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தன் சொத்தை அபகரித்ததாக மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது
நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் பூர்வீக சொத்தில் ஸ்ரீ ஆறுமுகம் பேக்கரி மற்றும் ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக தொழில் செய்து வந்தோம். எங்கள் தொழிலை விரிவு படுத்த கடந்த 2014 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள மேக்மா நிதி நிறுவனத்தில் எங்கள் பூர்வீக சொத்தை அட மனமாக வைத்து 98 லட்சம் நானும் எனது அண்ணனும் சேர்ந்து கடனாகப் பெற்றோம். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக எங்களால் நக்மா நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக என் அண்ணன் கடந்த 2017-ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். இச்சூழலில் கடனை முழுவதும் கட்டும் பொறுப்பு எங்கள் மேல் விழுந்தது. எங்களால் கடனை கட்ட முடியாத காரணத்தால் வெட்பால் நிதி நிறுவனம் எங்கள் சொத்தை ஏலத்தில் விட ஏற்பாடு செய்துவிட்டனர். அப்போது குன்னத்துரை சேர்ந்த என் அக்கா மகன் பார்த்திபன் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் கோயம்புத்தூர் சேர்ந்த பார்த்திபனின் மாமனார் சௌந்தரராஜன் இருவரும் சேர்ந்து நாங்கள் பெற்ற கடனை அடைத்து சொத்தை மீட்டு தருவதாக உறுதி அளித்தனர். அதேபோல் நெக்மா நிதி நிறுவனத்திற்கு நாங்கள் பெற்ற கடனை பார்த்திபன் செலுத்தி விட்டார். அதன் பின் பார்த்திபன் செலுத்திய பணத்தை எங்களிடம் வட்டியுடன் திரும்பி கேட்டு எங்களுக்கு மிகவும் அழுத்தத்தை கொடுத்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் எங்கள் சொத்தை விற்று கடனை அடைக்க நாங்கள் முற்பட்டோம், சொத்தின் மதிப்பை விட மிக குறைவான விலைக்கு கேட்டதால் எங்களால் யாரிடமும் சொத்தை விற்க முடியவில்லை. அதன் பின் தான் நாங்கள் அறிந்தோம் சொத்தை வாங்க வருகிற இடம் விலை குறைவாக கேட்கச்சொல்லி அவர்கள் சதி வேலை செய்தது.
அதன் பின் பார்த்திபன் என்னிடம் வந்து சொத்தை அவர் பெயருக்கு கிரையம் செய்து கொடுத்தால் அவருக்கு சேர வேண்டிய தொகையை எடுத்துக்கொண்டு மீதி தொகை கொடுப்பதாக உறுதி அளித்தார். இதற்கு பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரன் உத்தரவாதம் கொடுத்தார்.
என் அக்கா மகன் என்று நம்பிக்கையில் நாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியதால் எங்களது 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பார்த்திபனுக்கும் அவர் கூறிய நபர்களுக்கும் கிரயம் செய்து கொடுத்தோம். ஆனால் இன்று வரை எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் எங்களை ஏமாற்றி அடையாளம் தெரியாத அடியாட்களை வைத்து எங்களை மிரட்டியும் வருகிறார்.
சட்டரீதியான நடவடிக்கை எடுத்தும் எங்கள் குடும்பத்தார் உயிரை மீட்டு எங்களுக்கு பேர வேண்டிய பணத்தை பெற்று தருமாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
Tags